சென்னை | ஏப்ரல் 17, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ‘அக்னி நியூஸ் சர்வீசஸ்’ நிறுவனம் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் திமுக-விற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. இக்கணிப்பின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மிக வலுவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

முக்கியப் புள்ளிவிவரங்கள்:

விவரம்திமுக கூட்டணிஅதிமுக கூட்டணிதவெக (விஜய்)நாதக (சீமான்)
கணிக்கப்பட்ட இடங்கள்17856
வாக்கு சதவீதம்45.4%35.3%11.5%5.6%

மண்டல வாரியான ஆதிக்கம்:

திமுக-விற்கு 100% வெற்றி வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்த ஆய்வின்படி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு இடத்தைக் கூட விடாமல் திமுக முழுமையாக வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும் நீலகிரி, கரூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் திமுக கூட்டணி 100% இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *